Home உள்நாட்டு 4 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் மின்துண்டிப்பால் பாதிப்பு

4 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் மின்துண்டிப்பால் பாதிப்பு

66
0

சீரற்ற காலநிலை  காரணமாக நாடுதழுவிய ரீதியில் 475000  பேர் மின்துண்டிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி  அமைச்சு அறிவித்துள்ளது. 

இதுவரையில்  மின்துண்டிப்பு தொடர்பில் 12000 ஆயிரம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும்,மின் வழங்கலை வழமை நிலைக்கு கொண்டு வர  உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என  மின்சாரத்துறை அமைச்சின்  ஊடகப் பேச்சாளர்  சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்தார்.

காலி, மாத்தறை, கிரிபத்கொட, கண்டி, பேராதெனிய,  குளியாபிடிய, குருநாகல், களனி, இரத்மலானை, மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளில் உள்ளவர்கள் மின்துண்டிப்பு காரணமாக பெருமளவவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அத்துடன்  கண்டி-  கம்பளை பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில்  ஒருவர் காணாமல் போயுள்ளதாக  அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம்  அறிவுறுத்தியுள்ளது.

ஒரு சில பகுதிகளில் சிறு அளவிலான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக  அனர்த்த முகாமைத்துவ  மத்தி மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

ஒரு சில பகுதிகளில் அதிக மழைவீழ்ச்சி கிடைக்கப் பெற்றுள்ளதால்  நதிகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும்,  நதியோர பகுதிகளில் வாழும் மக்களின் பாதுகாப்பை  உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் நீர்பாசனத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தற்போதும் அப்பிரதேசங்களில் அமுலில் உள்ளதென தேசிய கட்டட ஆய்வு  மைம் அறிவித்துள்ளது. இன்றைய தினம் மழைவீழ்ச்சி குறைவடையும் என  காலநிலை  ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here