Home உள்நாட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டியது கட்டாயம் – மங்கள

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டியது கட்டாயம் – மங்கள

54
0

நான் அமைச்சராகப் பதவிவகித்த காலப்பகுதியில் தினமும் அமைச்சிற்கு முன்னால் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

எனினும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்துவதற்கு நான் பொலிஸாரை அழைக்கவில்லை. மாறாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன்.

அவர்களுடைய சில கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான அவர்களின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டியது கட்டாயமாகும் என்று முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மறு அறிவித்தல்வரை தடைசெய்யப்படுவதாக கடந்த செவ்வாய்கிழமை பொலிஸ் தலைமையகத்தினால் அறிவிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கடந்த புதன்கிழமையிலிருந்து பலதரப்பட்ட கோரிக்கைகள் மற்றும் உரிமைகளுக்காகப் போராடுவோரைக் கைதுசெய்யும் நடவடிக்கைகளைப் பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். 

குறிப்பாக நேற்று  வியாழக்கிழமை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களைப் பொலிஸார் தூக்கிச்சென்று பொலிஸ் வண்டிகளில் ஏற்றும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here