Home உள்நாட்டு உலகில் பரவும் கொடிய “ லாம்ப்டா ” வைரஸ்

உலகில் பரவும் கொடிய “ லாம்ப்டா ” வைரஸ்

72
0

உருமாறிய டெல்டாவை விட கொடிய லாம்ப்டா வைரஸ் உலகின் 30 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இது  மிக மோசான பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா கொரோனா வகையைவிடப் புதிதாகக் கண்டறியப்பட்ட லாம்ப்டா கொரோனாவைவிட மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக இங்கிலாந்து சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில், தென் அமெரிக்கா நாடுகளில் ஒன்றான பெரு நாட்டில் தற்போது புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

லாம்ப்டா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த உருமாறிய கொரோனா லத்தீன் அமெரிக்க நாடுகள் உட்பட 30 க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இதனைக் கவனிக்கப்பட வேண்டிய கொரோனா என்றும் உலக சுகாதார அமைப்பு பட்டியலிட்டுள்ளது.

பெரு நாட்டில் கடந்த இரண்டு மாதங்களில் உறுதி செய்யப்பட்ட கொரோனா பாதிப்புகளில் 82% லாம்ப்டா கொரோனா வகையால் ஏற்பட்டவை. மற்றொரு தென் அமெரிக்க நாடான சிலியில் 31% பேருக்கு லாம்ப்டா கொரோனா ஏற்பட்டுள்ளது.

பிரிட்டன் நாட்டில் தற்போது ஆறு பேருக்கு மட்டுமே லாம்ப்டா கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இது எந்தளவு தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தும், தடுப்பூசிகளின் செயல்பாடு உள்ளிட்டவற்றை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here