Home உள்நாட்டு இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட எனது மகனுக்கு நீதிவேண்டுமென தாயார் கோரிக்கை

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட எனது மகனுக்கு நீதிவேண்டுமென தாயார் கோரிக்கை

74
0

மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் வீட்டின் முன்னால் அவரது மெய்பாதுகாவலாரால் படுகொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரத்தின் ஆகிய எனது மகனின் படு கொலைக்கு நீதிவேண்டும் என அவரின்தாயார் கோரிக்கை விடுத்துள்ளளார்.

கடந்த மாதம் 21 ம் திகதி இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் மெய்பாதுகாவர் பொதுமகன் மீது துப்பாக்கி சூடு நடாத்தியதில் 34 வயதுடைய மகாலிங்கம் பாலசுந்தரம் என்பவரே உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மெய்பாதுகாவலர் கைது செய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.  

இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் வழக்கு விசரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது குறித்த மெய்பாதுகாவலருக்கு கொரோனா தொற்று காரணமாக நீதிமன்றத்திற்கு அழைத்து வரமுடியாத நிலையில் இந்த வழக்கு விசாரணை இடம்பெற்றது.

இதன்போது குறித்த சந்தேகநபரான மெய்பாதுகாவலரை  எதிர்வரும் 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்

இந்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு ஆஜரான உயிரிழந்தவரின் தாயார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

எனது மகனுக்கு என்ன நடந்தது என்னத்தினால் பிரச்சனை வந்தது என்றதுடன் எனது பிள்ளைக்கு நீதி கிடைக்கவேண்டும் அதுமட்டும்தான் தேவை என்றார்.

கடந்த 21ஆந் திகதி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்களது வீட்டிற்கு முன்பாக அவரது மெய்க்காவலர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட ந. பாலசுந்தரத்தின் வழக்கு இன்று மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி றிஸ்வான் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

குறித்த வழக்கில்  ஆஜராகியிருந்த சட்டத்தரணி அமலதாஸ்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ,

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின்  மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொல்லப்பட்ட பாலசுந்தரத்தின் வழக்கில் இன்றைய தினம் கூப்பிடு தினமான இன்று பொலிஸ் தரப்பினரால் இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பப்பட வேண்டிய ஆவணங்களை  சமர்பிற்ப்பதற்கு மன்றுக்கு கொண்டுவர பட்டிருந்தது.

கொலை சம்பவம் 21 ஆம் திகதி  இடம் பெற்றிருந்த போதிலும் சிசிடிவியினுடைய சில தரவுகள் கொண்டுவரப்படவில்லை இது தொடர்பாக நீதிமன்றம் கவனத்திற்கு கொண்டு வந்திருந்த போதிலும் 14 மற்றும் 15 தினங்களுக்கு மேலாகவும் உரிய முறையில் நீதிமன்ற அனுமதியுடன் சிசிடிவி இணைப்புக்கள் அல்லது டிடிஆர் என்று சொல்லப்படுகின்ற இந்த இணைப்புகள் எதையும் பெற்றுக் கொள்ள பட்டிருக்கவில்லை. பெற்றுக்கொள்ள பட்டிருப்பதை கூட நீதிமன்றத்துக்கு முறையாக சமர்ப்பிக்கப்படவில்லை.

இதனால் எதிரிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பின்னடைவு ஏற்படுத்தும் என்ற ஒரு விடயத்தையும் குறித்த இந்த விசாரணையின் மட்டக்களப்பு பொலிஸார் மிகவும் மந்தமான நிலையில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை கௌரவம் மன்றுக்கு  பாதிக்கப்பட்டவர் சார்பில் ஆஜராகி இருந்த நாங்கள் தெரிவித்து இருந்தோம்.

அத்துடன் இரசாயன பகுப்பாய்வுக்கு வழங்க கொண்டு வரப்பட்டு இருந்த ஆவணங்களில் சில குறைபாடுகள் இருந்தது இரத்த மாதிரிகள் கூட கொண்டுவரப்படவில்லை ஆகவே இவை அனைத்தையும் நீதிமன்றத்திற்கு கொண்டு வந்து சமர்ப்பிப்பதற்காக பிரிதொரு தினமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை குறித்த வழக்கை மீண்டும் மன்று எடுத்துக் கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here