Home உள்நாட்டு கடந்த 24 மணிநேரத்தில் 1,047 பேர் கைது

கடந்த 24 மணிநேரத்தில் 1,047 பேர் கைது

132
0

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் 1,047 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த குற்றச்சாட்டுக்காக ஒரே நாளில் அதிகளவான கைதுகள் இடம்பெற்றுள்ளமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.

அதிகளவான கைதுகள் நேற்றைய தினம் மத்தளையில் இடம்பெற்றுள்ளது. அங்கு 160 பேரும், நிக்கவரெட்டியவில் 119 பேரும், கண்டியில் 98 பேரும் அதிகளவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டோபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 19,102 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை கட்டுகுருந்தவில் ட்ரோன் கமரா மூலம் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கையில் தனிமைப்படுத்தல் உத்தரவினை மீறியமைக்காக மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் 4,636 முச்சக்கர வண்டிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. 

இதில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி பயணித்த குற்றச்சாட்டில் 17 முச்சக்கர வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தக் குழு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.

மேலும் மேல் மாகாணத்தின் 14 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் 2,481 வாகனங்களில் பயணித்த 4,484 நபர்கள் பரிசோதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 156 பேர் மாகாண எல்லைகளை கடந்து அத்தியாவசிய நோக்கங்களுக்காக பயணிக்க முயன்றதற்காக திருப்பி அனுப்பப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது இவ்வாறிருக்க இன்று 23,000 பொலிஸ் அதிகாரிகள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள வீதி தடைகளில் கடமையில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயண தடைகளுக்கு மத்தியில், பயணிக்கும்போது அத்தியாவசிய அனுமதி கடிதங்களின் செல்லுபடி குறித்து கவனம் செலுத்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here