Home உள்நாட்டு கொரோனா பரவலினால் ஏற்பட்ட அச்சுறுத்தல் நிலை இன்னமும் முடிவிற்கு வரவில்லை: வைத்திய நிபுணர் எச்சரிக்கை..!

கொரோனா பரவலினால் ஏற்பட்ட அச்சுறுத்தல் நிலை இன்னமும் முடிவிற்கு வரவில்லை: வைத்திய நிபுணர் எச்சரிக்கை..!

76
0

நாட்டில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கும் முதலாம் கட்டத் தடுப்பூசியை மாத்திரம் பெற்றுக்கொண்டவர்களுக்கும் திரிபடைந்த டெல்டா வைரஸ் பாரிய அச்சுறுத்தலைத் தோற்றுவித்திருக்கிறது. எனவே குறிப்பிட்டளவான சனத்தொகையினர் முழுமையாகத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் வரையில் சுகாதாரப்பாதுகாப்பு வழிகாட்டல்களை உரியவாறு பின்பற்றுவது மிகவும் அவசியம் என்று ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு பரிசோதனைப் பிரிவின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர வலியுறுத்தியுள்ளார்.

வைத்தியநிபுணர் சந்திம ஜீவந்தர அவரது டுவிட்டர் பக்கத்தில் மேலும் கூறியிருப்பதாவது:

‘திரிபடைந்த டெல்டா வைரஸ் என்பது மிக இலகுவாகப் பரவக்கூடியதாகும். இது தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கும் அல்லது ஒரு கட்டத்தடுப்பூசியை மாத்திரம் பெற்றுக்கொண்டவர்களுக்கும் இந்த டெல்டா வைரஸ் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறது. நாடளாவிய ரீதியில் குறிப்பிடத்தக்களவான சனத்தொகையினர் முழுமையாகத் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் வரையில் உரிய சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றவேண்டியது மிகவும் அவசியமாகும். கொரோனா வைரஸ் பரவலினால் ஏற்பட்ட அச்சுறுத்தல் நிலை இன்னமும் முடிவிற்குக்கொண்டுவரப்படவில்லை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here