Home உள்நாட்டு 19 வயது யுவதி மீது பாலியல் துஷ்பியோகம் : தனியார் பஸ் சாரதி, நடத்துனருக்கு விளக்கமறியல்

19 வயது யுவதி மீது பாலியல் துஷ்பியோகம் : தனியார் பஸ் சாரதி, நடத்துனருக்கு விளக்கமறியல்

105
0

ஹொரவபொத்தானை பகுதியில் யுவதியொருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய பஸ் சாரதி மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

ஹொரவபொத்தானை பகுதியில் பொது போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் பஸ் ஒன்றில் 19 யுவதியொருவரை குறித்த பஸ் சாரதியும் , பஸ் நடத்துனரும் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு ஹொரவபொத்தானை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து , அவர்கள் இருவரையும் எதிர்வரும் ஆறாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here