Home உள்நாட்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் பணி புறக்கணிப்பு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தாதியர்கள் பணி புறக்கணிப்பு

73
0

பதவி உயர்வு மற்றும் தாதியர் யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா வைத்தியசாலை தாதியர்களும் இன்று சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வைத்தியசாலை நோக்கி வருகைதந்த நோயாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

தூர பிரதேசங்களிலிருந்து வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகை தந்த முதியவர்கள், தாய்மார்கள், உள்ளிட்ட பலரும் வைத்தியசாலைக்கு வந்து சிகிச்சை பெறாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்பி வருகின்றனர்.

முற்கூட்டியே இந்த பணிப்புறக்கணிப்பு தெரியாத காரணத்தினால் பணம் செலவழித்து, சிரமத்தின் மத்தியில் வைத்தியசாலைக்கு வரவேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்காது என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வவுனியா மாவட்ட வைத்தியசாலை

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற தாதிய உத்தியோகஸ்தர்கள் இன்று (01.07.2021 காலை முதல் இரண்டு நாள் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here