Home உள்நாட்டு யாழ்ப்பாணத்தில் படையினரால் மிளகாய் உற்பத்தி

யாழ்ப்பாணத்தில் படையினரால் மிளகாய் உற்பத்தி

77
0

இராணுவ தளபதியின் ‘துரு மித்துரு நவ ரட்டக்’ திட்டத்தின் கீழ் விவசாய உற்பத்தியி்ல் தன்நிறைவு அடைவதை இலக்காக கொண்டு யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் விவசாய பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட மிளகாய் சகாய விலையில் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அவர்களின் வழிகாட்டலுக்கமைய திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிலையில், யாழ்.பாதுகாப்பு படைத்தலைமையகத்தை சூழவுள்ள பொதுமக்களின் பெருமளவான நிலப்பரப்பினை இராணுவத்தினர் கையகப்படுத்தி உயர் பாதுகாப்பபு வலயமாக அறிவித்துள்ளனர். 

அப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் சுமார் 32 வருட காலங்களுக்கு மேலாக இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்கள், உறவினர் வீடுகள் , வாடகை வீடுகளில் தங்கியுள்ளனர். 

தம்மை சொந்த இடங்களில் மீள் குடியேற்றுமாறு கோரி கடந்த 11 வருடங்களுக்கு மேலாக போராட்டங்களை நடாத்தி வருகின்றனர். 

இந்நிலையில் பொதுமக்களின் காணிகளை , தேசிய பாதுகாப்பு என கூறி , இராணுவத்தினர் கையகப்படுத்தி அதனை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தி வைத்த்துள்ளனர். 

குறித்த காணியில் இராணுவத்தினர் விவசாய பண்ணைகள் , கால்நடை பண்ணைகள் என்பவற்றை அமைத்துள்ளனர்.

இன்று விவசாய பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட மிளகாய்களை உள்ளூர் சந்தைகளில் விநியோகித்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here