Home உள்நாட்டு திருகோணமலையில் அடிப்படை வசதிகள் இன்றி பெரிதும் சிரமம்படும் மக்கள்

திருகோணமலையில் அடிப்படை வசதிகள் இன்றி பெரிதும் சிரமம்படும் மக்கள்

106
0

திருகோணமலை மாவட்டத்தின்  மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஹபீர் நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் இன்றி பெரிதும் சிரமம்பட்டு வருவதாக அப்பகுதியில் வசிப்போர் தெரிவிக்கின்றனர்.

மின்சாரம் மற்றும் மலசல கூட வசதிகள் இல்லாமல் சிரமம்படுவதாகவும் அரசினால் வழங்கப்படுகின்ற எந்தவிதமான நன்மைகளும் தமக்கு கிடைப்பதில்லை எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.

தகரக்கொட்டகைகளினால் அமைக்கப்பட்ட வீடுகளில் தாம் வசித்து வருவதாகவும் மழை காலங்களில் நீர் வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

கிராம அதிகாரி மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் தம்மை கவனிப்பதில்லை எனவும் அரசினால் எந்த கொடுப்பனவுகளும் கிடைக்கவில்லை எனவும் தொழில் நடவடிக்கைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

தமக்கு குடியிருப்பதற்கான வீடு ஒன்றினை கட்டித் தருமாறும் வாழ்வாதாரத்திற்கான உதவிகளை ஏற்படுத்தி தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here