Home உள்நாட்டு பஷில் மற்றும் மைத்திரிக்கு அமைச்சு பதவிகள் ?

பஷில் மற்றும் மைத்திரிக்கு அமைச்சு பதவிகள் ?

75
0

எதிர்வரும் வாரம் அமைச்சரவையில்  மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும்  ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளதாக நம்ப தகுந்த அரசியல் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

பொதுஜன பெரமனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ எதிர்வரும்  வாரம் பாராளுமன்ற உறுப்பினராக   பதவி ஏற்கவுள்ளார்.  இவர் அமைச்சரவை  அமைச்சராக   முக்கிய அமைச்சினை பொறுப்பேற்கவுள்ளார்.

அத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர்  மைத்திரிபால சிறிசேன மற்றும்   நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்கவிற்கும் அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவிற்கு பொருளாதாரம்  தொடர்பான அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளன.  இவரது அமைச்சின் கீழ்  கொழும்பு துறைமுக நகரம், முதலீட்டு சபை  உள்ளிட்ட பொருளாதார கேந்திர  மத்திய நிலையங்கள் பல உள்ளடக்கப்படுகின்றன.

சுற்றாடல் அமைச்சு பதவியை தனக்கு வழங்குமாறு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளதாக அறிய முடிகிறது. அத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து  விலகிபொதுஜன பெரமுனவுடன் ஒன்றினைந்த  இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளதாக அறிய முடிகிறது.

எதிர்வரும் வாரம் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படவுள்ளதாகவும், பலரது அமைச்சு பதவிகளிலும், அமைச்சுக்களின் விடயதானங்களிலும் மாற்றம் ஏற்படவுள்ளதாகவும் அறிய முடிகிறது. பொதுஜன பெரமுனவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்வரும் காலங்களில் இராஜாங்க  அமைச்சு பதவிகள் வழங்கவுள்ளதாக  குறிப்பிடப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here