Home உள்நாட்டு ஐக்கிய மக்கள் சக்தியினால் மாத்தளை – லக்கல வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் நன்கொடை

ஐக்கிய மக்கள் சக்தியினால் மாத்தளை – லக்கல வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் நன்கொடை

66
0

ஐக்கிய மக்கள் சக்தியினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ‘எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு’ நிகழ்ச்சித் திட்டத்துக்கமைய ஆரோக்கியமான நாட்டைக் கட்டியொழுப்பும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஆலோசனைக்கமைய நடைமுறைப்படுத்தப்படும் ‘ஜன சுவய’ வேலைத்திட்டத்திற்கமைய 3,30,000 ரூபா பெறுமதியுடைய அத்தியவசிய மருத்துவ உபகரணங்கள் மாத்தளை லக்கல வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் வைத்தியர் ராஜித சேனாரத்ன, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, கட்சியின் ஊடகப் போச்சாளரும் பிரதி செயற்ப்பாட்டுப் பிரதானியுமா மனுஷ நாணாயக்கார, மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன மற்றும் வைத்தியர் காவிந்த ஜயவர்தன ஆகியோர் கலந்து கொண்டனர்.

லக்கல மருத்துவமனை பணிப்பாளர் மருத்துவர் அபிஷேக சங்கல்பவிடம் இவை கையளிக்கப்பட்டன. கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குழு, அமைப்பாளர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் கிளைகள், உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவாளர்கள் ‘ஜன சுவய’ கருத்திட்டத்தில் இணைந்து கொண்டு ”எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு’ நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here