Home உள்நாட்டு பாராளுமன்ற வருகை குறித்து பஷில் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை – திலும் அமுனுகம

பாராளுமன்ற வருகை குறித்து பஷில் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை – திலும் அமுனுகம

68
0

தற்போதைய சூழ்நிலையில் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் வரும்  தீர்மானத்தை பொதுஜன பெரமுனவின்  ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ  இன்னும் எடுக்கவில்லை என போக்குவரத்து மற்றும்  சமுதாய பொலிஸ் சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷ எதிர்வரும் மாதம் 6 ஆம் திகதி தேசிய பட்டியல்   ஊடாக பாராளுமன்ற உறுப்பினாக பதவி பிரமானம் செய்யவுள்ளதாக  சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளன. 

அவர் பாராளுமன்றம் வருவது உறுதி ஆனால் தற்போது வருவார் என்று குறிப்பிட முடியாது. அவ்வாறான தீர்மானத்தையும் அவர் எடுக்கவில்லை என்றே குறிப்பிட வேண்டும.

பொதுஜன பெரமுன  ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியமைக்கு  முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் திட்டமிடல்கள்  பிரதான காரணியாக அமைந்தது.  2015 ஆம் ஆண்டு  அரசியல் ரீதியில் தனித்து விடப்பட்டிருந்த அனைத்து தரப்பினரையும் ஒன்றுப்படுத்தி  அனைத்து தேசிய தேர்தல்களிலும் வெற்றிப் பெறுவதற்கான   திட்டத்தை அவரே வகுத்தார்.

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவின் பாராளுமன்ற வருகை  அரசாங்கத்தை பலப்படுத்தும். பொருளாதார முன்னேற்றம் குறித்து அவர் வகுத்துள்ள திட்டங்கள் செயற்படுத்தப்படும்.  கூட்டணிக்கள் காணப்படும் கருத்து  வேறுப்பாடுகள் அரசாங்கத்தை ஒருபோதும் பலவீனப்படுத்தாது என்றும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here